ரயில்வே துறையில் துணை ஸ்டேஷன் மாஸ்டர் பதவிக்கான தேர்வு கடந்த 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வின் போது அகமதாபாத், வதோதரா, ஆனந்த் ஆகிய இடங்களில் வேலை பணிபுரிந்த 8 அதிகாரிகள் மற்றும் தனிநபர் ஒருவர் 50,000 முதல் 1 லட்சம் வரை பணம் வாங்கிக்கொண்டு தேர்வு வினாத்தாளை லீக் செய்ததாக சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையை தொடர்ந்து சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் தனி நபர் விசாரணை காலத்தில் உயிரிழந்து விட்டார். 23 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்வு வினாத்தாள் லீக் விவகாரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
