இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள மொத்தம் 6,238 டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. Technician Grade – I (Signal)
காலியிடங்கள்: 183
மாத சம்பளம்: ரூ.29,200
கல்வித் தகுதி:
இயற்பியல் / மின்னணுவியல் / கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பம் / கணினி தொழில்நுட்பம் துறையில் பி.எஸ்சி (அல்லது)
மேற்கண்ட துறைகளில் 3 வருட டிப்ளமோ (அல்லது) பொறியியல் பட்டம்
வயது வரம்பு: 18 முதல் 33 வயது வரை
2. Technician Grade – III
காலியிடங்கள்: 6,055
மாத சம்பளம்: ரூ.19,900
கல்வித் தகுதி:
10ம் வகுப்பு + NCVT / SCVT அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட ஐடிஐ (அல்லது)
10ம் வகுப்பு + சம்பந்தப்பட்ட துறையில் சட்டப்பூர்வ பயிற்சி
வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை
வயது தளர்வு:
SC / ST: 5 ஆண்டுகள்
OBC: 3 ஆண்டுகள்
ஊனமுற்றோர் (PwBD):
பொதுப்பிரிவு/ EWS – 10 ஆண்டுகள்
SC/ST – 15 ஆண்டுகள்
OBC – 13 ஆண்டுகள்
விண்ணப்பிக்கும் முறை:
இணையதளம்: www.rrbapply.gov.in
விண்ணப்பங்கள் முற்றிலும் ஆன்லைனில் மட்டுமே ஏற்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
SC / ST / பெண்கள் / திருநங்கைகள் / முன்னாள் ராணுவத்தினர் / இபிசி: ரூ.250
CBT தேர்வுக்குப் பிறகு முழு தொகை திருப்பி தரப்படும்.
மற்ற பிரிவினருக்கு: ரூ.500
தேர்வுக்குப் பிறகு ரூ.400 திருப்பி தரப்படும்.
தேர்வு முறை:
1. கணினி அடிப்படையிலான தேர்வு (CBT)
2. ஆவண சரிபார்ப்பு (DV)
3. மருத்துவ பரிசோதனை (ME)
முக்கிய தேதிகள்:
விண்ணப்ப தொடக்கம்: 28.06.2025
கடைசி தேதி: 28.07.2025
நிறுவன வேலை விரும்பும் தகுதியான இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் உடனே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு – www.rrbapply.gov.in இணையதளத்தை பார்வையிடலாம்.
