தெலுங்கானா மாநிலம் சூரியப்பேட்டை பகுதியில் நகை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நகை கடையின் கழிவறை சுவற்றில் துளையிட்டு மர்ம நபர்கள் சிலர் கடைக்குள் நுழைந்தனர். அங்கு இருந்த லாக்கரை உடைத்து ரூ.17 கோடி மதிப்பிலான சுமார் 18 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காவல்துறையினர் குற்றவாளிகளை தேடும்படியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.