சவுதி அரேபியா மற்றும் அரபு உலகம் முழுவதும் தூங்கும் இளவரசர் என்று அறியப்பட்டவர் அல் வலீத் பின் காலித் பின் தலால் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத். இவர் விபத்தில் சிக்கிக் கடந்த 20 ஆண்டுகளாக ஹோமாவிலிருந்து நிலையில் நேற்று காலமானார். இவருக்கு வயது 35.

தூங்கும் இளவரசர் குணமடைய வேண்டும் என பலரும் வேண்டுதல் நடத்திய நிலையில் அவருடைய தந்தை மிகவும் அன்பு கொண்டு அவருக்கு ஒவ்வொரு வருடமும் கோமாவில் இருந்தாலும் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவார். கடந்த 2005ஆம் ஆண்டு அவருக்கு 15 வயது இருக்கும் போது திடீரென ஒரு கார் விபத்தில் சிக்கினார்.

இந்த கார் விபத்தில் சிக்கி ஹோமா நிலைக்கு சென்ற அவர் கிட்டத்தட்ட 20 வருடங்களாக அப்படியே இருந்த நிலையில் தற்போது மரணம் அடைந்தார். மேலும் இவரது மரணம் சவுதி அரேபியா மற்றும் அரபு நாடுகள் முழுவதும் கவலையை ஏற்படுத்திட நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.