ஒடிசா மாநிலம் பயபர் கிராமத்தில் ஒரு 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி இன்று காலை தன்னுடைய தோழி வீட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். இந்த சிறுமி ஒரு தோட்டத்திற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென வந்த மூன்று இளைஞர்கள் அவரை வழிமறித்தனர்.

அவர்கள் திடீரென தாங்கள் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து அந்த சிறுமியை உயிரோடு எரித்தனர். அந்த சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு கிராமத்தினர் ஓடி வந்த நிலையில் இளைஞர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

தற்போது 70 சதவீதம் தீக்காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் சிறுமியை எதற்காக அவர்கள் எரித்தனர் என்பதற்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை.