மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த தம்பதியினரின் உறவினர் குடும்பத்துடன் அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு குழந்தை பிறந்துள்ளது. பிறந்து ஒரு சில மாதங்களே ஆன குழந்தையை குழந்தையின் பெற்றோர் இந்தியா அழைத்து வந்து மும்பையை சேர்ந்த தம்பதியினரின் வீட்டில் வைத்து பார்த்து வந்துள்ளனர்.
அந்த குழந்தையே தத்தெடுக்க விரும்பிய மும்பை தம்பதியினர் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இந்த மனுவினை நீதிபதிகள் விசாரித்த போது, சிறார் நீதி மற்றும் தத்தெடுத்தல் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் இந்த குழந்தை தற்போது பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டிய சூழலிலோ, சட்ட சிக்கலிலோ இல்லை என தெரிவித்தனர்.
மேலும் இந்த குழந்தை வெளிநாட்டு குடியுரிமை பெற்ற குழந்தையாக உள்ளதால் இங்கு இந்தியாவில் வெளிநாட்டு குழந்தையை தத்தெடுக்க சட்டத்தில் இடமில்லை. எனவே இந்த அமெரிக்க குழந்தையை தத்தெடுக்க மனுதாரர்களுக்கு உரிமை இல்லை.
அவ்வாறு குழந்தையே தத்தெடுக்க விரும்பினால் அமெரிக்க சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின் படி குழந்தையை தத்தெடுப்பதற்காக அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும். அதன்பின்னரை மனுதாரர்கள் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என தீர்ப்பளித்து இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
