கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள ஆரம்பாக்கத்தில் கடந்த 12ஆம் தேதி அன்று பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய 8 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர் பின் தொடர்ந்து உள்ளார். அதன் பின் அவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றவாளியை பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்காத நிலையில் தற்போது சம்பவ இடத்திலிருந்து சிசிடிவி கேமரா மூலம் குற்றவாளியின் தெளிவான புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே அந்த நபர் குற்றச் செயலில் ஈடுபடுவதற்கு முன்பு சிறுமியின் பின்னால் நடந்து செல்வது மற்றும் சிறுமியை கடத்திச் செல்வது சிசிடிவி தெளிவாக பதிவாகியுள்ளது, இதையடுத்து அவரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல மருத்துவரின் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு சிறப்பு மருத்துவ குழு கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து காவல்துறையினர் நெல்லூரில் சந்தேகத்தின் பெயரில் இரண்டு வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரையும் ஆரம்பாக்கம் அழைத்து வந்த தனிப்படை காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.