சென்னை ஆவடி அருகே திருநின்றவூர் பகுதியில் ஒரு 17 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த சிறுமியின் தந்தை இறந்துவிட்ட நிலையில் பனிரெண்டாம் வகுப்பு முடித்த இந்த சிறுமி தன்னுடைய அக்கா மற்றும் தாயுடன் வசித்து வந்தார். இந்த சிறுமி பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார்.

இந்த காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்த நிலையில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக பேசாமல் இருந்துள்ளனர். இதனால் மாணவி மன வேதனையில் இருந்ததாக கூறப்படும் நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தன்னுடைய அக்காவின் செல்போனை எடுத்து வாலிபருக்கு தொடர்பு கொண்டார்.

ஆனால் வாலிபர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் instagram-ல் தன்னுடைய ஐடியில் இருந்து அம்மாவை நல்ல பார்த்துக்கோ, எனக்கு வாழவே பிடிக்கல, செத்துடலாம் போல தோணுது. பையன் குடும்பத்தை சும்மா விடாதிங்க என தன் அக்காவுக்கு மெசேஜ் அனுப்பி விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக திருநின்றவூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.