அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழ்நாட்டை மீட்போம் என்ற தலைப்பில் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அங்கு கலந்து கொண்டவர்களிடம் பேசினார்.

அவர் பேசியதாவது, கச்சதீவை தாரை பார்த்தபோது மத்தியில் ஆட்சி செய்தது காங்கிரஸ் மற்றும் திமுக தான்.

ஆனால் தற்போது கச்சத்தீவை மீட்பதில் பாஜக அரசியல் செய்வதாக மத்திய அரசு மீது திமுக பழி போடுகிறது. மத்தியில் 16 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது திமுகவின் கண்களுக்கு தமிழக மீனவர்கள் தெரியவில்லை. ஆட்சி அதிகாரத்தில் இருந்த போதே திமுக கச்சதீவை மீட்டு தமிழ்நாட்டு மீனவர்களை காப்பாற்றி இருக்கலாமே.

ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்ததே திமுக தான். மேலும் தற்போது மத்திய அரசின் மீது பழி போட்டு மீனவர்களின் வாக்குகளை பெற முயற்சி செய்கிறார்கள் என்று கூறினார்.