திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியில் கடந்த 17ஆம் தேதி அன்று 19 வயது மதிப்புள்ள வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அடித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக தனிக்குழு அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில் இறந்தவர் திருநெல்வேலியில் உள்ள பழையப்பேட்டை பகுதியில் வசித்து வந்த வெற்றி(19) என்பது தெரியவந்தது. இவர் செப்டிக் டேங்க் கிளீனிங் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தன்னுடன் வேலை பார்த்த இசக்கிமுத்து(21), இசக்கிமுத்து(23) மற்றும் தங்க குமார்(23) ஆகியோருடன் சேர்ந்து ஒன்றாக மது அருந்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், அவர்கள் வெற்றியை தாக்கியதில் அவர் மரணம் அடைந்தது தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.