பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் பியாஸ் என்ற கிரமத்தை சேர்ந்தவர் பவுஜா சிங்(114). இவர் பிரபலமான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர். பவுதா சிங் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி உயிரிழந்தார். பின்பு அந்த காரை ஓட்டியவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

உயிரிழந்த பவுஜா சிங் அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆக்சிடென்ட் செய்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திய போது விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி சென்ற நபர் தில்லான் என தெரியவந்தது.

இவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் கனடாவில் இருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பவுஜா சிங் மீது மோதியதாக ஒப்புக்கொண்டார்.

எனவே இவர் மீது பொதுவழியில் வேகமாக வாகனம் ஓட்டியதன் காரணமாக, 281 மற்றும் 105 என்ற‌ சட்டத்தின்‌ கீழ் கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.