அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதி வாரியாக பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, அதில் ஸ்டாலினின் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, “அது விளம்பரம் மாடல் ஆட்சி” என கூறினார். மேலும் அரசு ஊழியர்கள் அரசுக்காக வேலை செய்பவர்கள், அரசியல்வாதிகளாக மாறிவிடக்கூடாது எனக் கூறினார்.
பின்னர் எனக்கு விவசாயம் தான் தொழில் எனக்கென கம்பெனி எல்லாம் கிடையாது. மக்கள் பிரச்சனைக்காகத்தான் டெல்லி செல்கிறோம் எனவும், கடந்த 2001 ஆம் ஆண்டு திமுக- பாஜக உடன் கூட்டணி வைத்தபோது இவ்வாறெல்லாம் பேசவில்லை.
தற்போது பேசுவதற்கு காரணம், பாஜக உடன் கூட்டணி என கூறியதால் முதலமைச்சருக்கு பயம் வந்துவிட்டது என தெரிவித்தார், இதனை அடுத்து எங்களது கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றுதான் அமித்ஷா கூறினார். அதிமுக- பாஜக கூட்டணியை பொறுத்தவரை நான் சொல்வது தான் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
அதன் பின் பாமக உள் கட்சி மோதல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, பாமக வில் நடக்கும் உட்கட்சி பிரச்சனைகளுக்கு நாங்கள் தலையிட முடியாது. ஓ. பன்னீர்செல்வம் குறித்த கேள்விக்கு காலம் கடந்து விட்டதாகவும் பதில் அளித்தார்.
