ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் பரத் நகரில் இருந்து தோடா என்ற பகுதிக்கு இன்று காலை ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பண்டா நகர் மலைப்பகுதி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மலையில் இருந்து கவிழ்ந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் 17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மீட்புப் படையினர் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது.
