விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமகவின் 37 வது ஆண்டு விழா நடைபெற்றது. அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத் தோட்டத்தில் உள்ள பெரியார் கார்ல் மார்க்ஸ் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் அவர் பாமக கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்த விழாவில் கட்சித் தொண்டர்கள் பலரும் பங்கேற்றனர். ஆனால் தலைவர் அன்புமணி விழாவை புறக்கணித்தார்.
இந்நிலையில் வரும் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அன்புமணி கூறியது குறித்து ராமதாஸ் இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அன்புமணி பேசியது அவருடைய கருத்து என்று தெரிவித்துள்ளார்.
