தமிழக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, முதலமைச்சருக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. ஓர் அணியில் திரள்வோம் ஓர் அணியில் சேருவோம் என்கிறாரே ஓரணியில் சேர இப்பொழுது என்ன அவசரம் வந்துள்ளது.

படிப்பதற்காக பிரதமர் மோடி ஏராளமான திட்டங்களை அளித்துள்ளார். அமித்ஷா சென்னை வந்ததிலிருந்து முதலமைச்சருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் விரக்தியில் உள்ளார். தோற்கப் போவது உறுதி என அவர்களுக்கு தெரிந்து விட்டது.

தோல்வி பயத்தில் தொடர்ந்து அடுக்கு மொழியில் பேசிக்கொண்ட இருக்கிறார். அதே காவி கும்பலோடு தான் கலைஞர் கூட்டணி வைத்தார். அதே காவிக் கும்பலோடு தான் அன்றைக்கு இருந்தார்கள். அப்போது பாஜகவுடன் கூட்டணி வைக்கும் போது சங்கிகளாக இருந்தார்கள்.

பாஜக விட அதிமுகவை அடகு வைத்ததாக சொல்கிறார்கள். அப்படி என்றால் காங்கிரஸ் கட்சியும், விடுதலை சிறுத்தை கட்சியும் திமுக விடம் அடகு வைத்துள்ளார்களா? பாஜக கொஞ்சம் கொஞ்சமாக அதிமுகவை விழுங்கி விடும் என சொல்கிறார்கள்.

அப்படி என்றால் திமுகவோடு கூட்டணி வைத்திருந்த போது திமுகவை விழுங்கினோமா? தோல்வி பயத்தில் எதையாவது சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

தமிழகத்திற்கு நல்லாட்சி வரவேண்டும் அவர்கள் 200 தொகுதிகளில் ஜெயிப்போம் எனக் கூறினார்கள்.  நாங்கள் 234 தொகுதிகளிலும் ஜெயிப்போம் என கூறினார்.