மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்கும் போது, அவர்கள் உடைய குறைபாடு அந்த வேலையின் திறனை நேரடியாக பாதிக்குமானால் மட்டுமே அவர்களைத் தகுதிநீக்கம் செய்ய முடியும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெளிவுபடுத்தியுள்ளது.
சிஐஎஸ்எஃப் (CISF) காவலர் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வை வெற்றிகரமாக முடித்த பின், தனது வலது கையில் 6 விரல்கள் உள்ளன என்ற காரணத்தால் தன்னை தகுதிநீக்கம் செய்தது தவறு என கூறி பாலமுருகன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குறைந்தபட்சமாக மாற்றுத் திறனாளிகளின் உடல் குறைபாடு அந்த பணிக்கேற்ப திறனை பாதிப்பதில்லை என்பதைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கவேண்டும் என்றும், மாற்றுத் திறனுக்கு அடிப்படையாகவே வேலை மறுப்பு நியாயமற்றது எனக் கூறி வழக்கினை தொடர அனுமதி வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் மனுதாரரை மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
