ஈரோடு மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு 92 வயது ஆகிறது. இவரது மனைவி சரோஜா(82). இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக ராதாகிருஷ்ணன் உயிரிழந்தார்.
கணவர் இறந்த துக்கம் தாங்காமல் தொடர்ந்து அழுது கொண்டிருந்த சரோஜா திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சரோஜாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சரோஜா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். எப்போதும் இணை பிரியாமல் ஒன்றாக இருந்த தம்பதியினர் ஒரே நாளில் உயிரிழந்தது அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
