மழையுடன் இருந்த அமைதியான தருணம் சில விநாடிகளில் பயங்கர தரைநாசமாக மாறிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அதாவது வீட்டின் வாசலிலே நின்று மழையை ரசித்த நபர்,  வீட்டின் வெளிப்புற கேட்டை திறந்தார். அவர் கேட்டில் கை வைத்ததும் திடீரென சுற்றுசுவர் இடிந்து தரைமட்டமானது.

அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்த்தபினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியதுடன், பலர் இதைப் பார்த்து “இது நிஜமா?” எனக் கேட்கும் அளவுக்கு பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

‘Ghar Ke Kalesh’ என்ற எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஒரு நபர் தனது வீட்டின் முன்பக்க பகுதியில் நின்று மழையை ரசிக்கிறார். ஒருவேளை புயல் காற்றிலும் கனமழையிலும், திடீரென அவரது வாசல் கதவு தானாகவே திறக்கப்படுகிறது. அவர் அதனை மூட சென்று, ஒரு பக்கம் அடைத்ததும், இரண்டாம் பக்கத்தை மூடவே அங்கேயே அருகில் இருந்த சுவர் இடிந்து விழுகிறது.

சுவர் இடிந்து விழும்போது தூசிப் புயலும் எழுகிறது. அதற்கு பின்னர், அவர் வீடு முன் இருந்த குறுகிய சாலை சில வினாடிகளில் இடிந்து விழும் காட்சியும் பதிவாகியுள்ளது. அந்த நபர் இடத்தில் நின்றவண்ணம் கண்களால் பார்த்ததையே நம்ப முடியாமல் அதிர்ச்சியில் உறைந்திருப்பது வீடியோவில் தெளிவாக காணப்படுகிறது.

இந்த சம்பவம் தற்போது நகர்ப்புற கட்டமைப்பின் குறைகளை வெளிக்கொணர்கிறது. மழைக்காலத்தில் பராமரிக்கப்படாத சாலைகள், தரமில்லாத கட்டிடப் பொருட்கள், திறனற்ற வடிகால் அமைப்புகள் போன்றவையால் இடிந்து விழும் சுவர், சாலை போன்றவை பொதுமக்களின் உயிருக்கு பெரிய ஆபத்தாக மாறியுள்ளது.

இந்த வீடியோ வெளியான பிறகு, சமூக வலைதளங்களில் பலரும் நகர்ப்புற திட்டங்கள் குறித்து கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். “இப்படி ஒரு சுவர் இடிந்து விழுந்துள்ளது? இது நம்ம ஊரா?” என பலரும் பதிவிட்டு வருகிறார்கள். மேலும் இதோ அந்த வீடியோ,