புத்திசாலித்தனத்திற்கும், உணர்வுப் பிணைப்புகளுக்கும், அமைதியான இயல்பிற்கும் பெயர் பெற்ற யானைகள், மீண்டும் ஒருமுறை அவை எவ்வளவு உணர்ச்சிப் பூர்வமாக நடந்து கொள்கின்றன என்பதை சுட்டிக்காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவினை Save Elephant Foundation அமைப்பின் நிறுவனர் லெக் சைலர்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த மனதை உருக்கும் காட்சியில், லெக் சைலர்ட் மென்மையான தாலாட்டுக் குரலில் ஒரு பாடலைப் பாடிக்கொண்டிருக்க, அருகில் அமைதியாக நிற்கும் யானை தனது தும்பிக்கையால் நெகிழ்ச்சியுடன் அவருடைய தலைச்சுற்றி சுற்றி, பாசத்துடன் தழுவுகிறது.
இந்த வீடியோவிற்கு லெக் சைலர்ட் கொடுத்த தலைப்பு வெறும் மூன்று வார்த்தைகள்தான்: “Lullaby time.” ஆனால் அந்த தலைப்பு மட்டுமே, யானையின் அன்பும் நம்பிக்கையும் நிரம்பிய அந்த தருணத்தின் மௌன மொழியாக அமைந்துள்ளது. இந்த வீடியோ இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், ஆயிரக்கணக்கான அனுபவ பகிர்வுகளையும் பெற்றுள்ளது.
View this post on Instagram
ஒருவர், “இதுபோன்ற தருணங்களை உருவாக்குவது சுத்தமான அன்பால் மட்டுமே முடியும்” என நெகிழ்ந்துள்ளார். மற்றொருவர், “என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. யானைகள் உணர்வுகள் நிறைந்த உயிர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒருவர், “யானையின் தும்பிக்கையை அவர் தலையில் வைக்கிற விதம்… அது ஒரு ஆசீர்வாதம் போல!” என பதிவிட்டுள்ளார்.
மேலும் சிலர், “இங்கே சங்கிலி இல்லை, சித்திரவதை இல்லை… இது போல அன்பும் பரிசும் மட்டுமே இருக்கிறது” என உருக்கமாகக் கூறியுள்ளனர். “பாருங்கள்… caretaker-ஐ நம்பும் அந்த யானையின் நம்பிக்கையை… அதை போல யாரும் நடிக்க முடியாது,” என ஒரு பக்கமான கருத்தும் பதிவானது. “இதே மாதிரி அன்பு எல்லா உயிர்களுக்கும் கிடைக்கணும்” என்ற ஆசைபூர்வமான கருத்துகள் தொடர்ந்து எழுந்துள்ளன.
“இந்த வீடியோ என் இதயத்தை பூர்த்தி செய்துவிட்டது… உயிரினங்கள் நம்மால் நினைப்பதைவிட அதிகம் புரிந்துகொள்கின்றன” என ஒருவர் கூற, மற்றொருவர் “நானும் அங்கேயே, அந்த அமைதியான பாடலும் யானைகளும் நிறைந்த உலகில் இருக்கவேண்டும்” என கனவுப்போல் கருத்து எழுதியுள்ளார்.
“இந்த காரணத்திற்காகத்தான் இந்த கணக்கை நான் பின்தொடர்கிறேன்… மனிதனுக்குள் இன்னும் இவ்வளவு பாசம் இருக்கிறது என்பதை நம்ப வைக்கும் வீடியோ!” என சிலர் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு, மனதை உருக்கும் இந்த அற்புதமான வீடியோ இணையத்தில் பரவி, மனிதன் மற்றும் இயற்கையுடன் வாழும் உயிர்களின் இடையிலான பாசப்பிணைப்பின் அழகை மேலும் ஒருமுறை வெளிக்கொணர்கிறது.
