இந்திய திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி தயாரிப்பாளரும் மற்றும் இயக்குனருமான தீரஜ் குமார்(80) கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் பல்வேறு பாலிவுட், பஞ்சாபி படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
இதனை அடுத்து டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தீரஜ் குமார் வயது முதிர்வின் காரணமாக நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், உடல் நலக்குறைவால் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இன்று காலை 11 மணியளவில் நடிகர் திரஜ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவு திரை துறையில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் திரைத்துறை நடிகை, நடிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
