பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவிற்கு தம்பதியினர் ஒருவர் தங்களது 6 வயது மகனுடன் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளனர். அங்கு உள்ள இடங்களை எல்லாம் சுற்றிப் பார்த்த பின் அவர்கள் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
அப்போது நேற்று இரவு ஹோட்டல் அறையில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இறுதியில் சண்டை முற்றிய நிலையில் கோபத்தில் அந்த நபர் தனது 6 வயது மகனை கொடுமையான முறையில் அடித்துள்ளார்.
மேலும் தரையில் தூக்கி வீசியுள்ளார். அதனால் மூச்சுப் பேச்சின்றி கிடந்த சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிறுவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பேரில் தலைமறைவான தந்தையே தேடி வருகின்றனர். ஹோட்டல் அறையில் கணவன் மனைவி தகராறில் குழந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
