லண்டனில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இத்தாலியைச் சேர்ந்த உலகின் நம்பர் ஒன் வீரர் ஜானிக் சின்னர் மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்த உலகின் நம்பர் 2 வீரர் கார்லோஸ் அல்போன்ஸ் உடன் மோதினார்.

இந்த போட்டியில் 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு பிறகு அவர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்றுள்ளார். இந்த வெற்றிக்குப் பிறகு விம்பிள்டனின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் ஜானிக் சின்னர் புகைப்படத்தை பின்னால் மக்கள் இருப்பது போன்றும் அவர் கோப்பையுடன் செல்பி எடுப்பது போன்ற ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அதாவது ஜனநாயகன் படத்தில் நடிகர் விஜய் மக்களுடன் சேர்ந்து செல்பி எடுப்பது போல் வெளியான போஸ்டரை மையப்படுத்தி இந்த போஸ்டரை அவர்கள் உருவாக்கியுள்ளனர். மேலும் இந்த போஸ்டர் தமிழ்நாட்டில் தற்போது மிகவும் ட்ரெண்டாகி வருகிறது.