பல்வேறு நாடுகளில் இருந்து உயர்ரக போதைப் பொருட்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதனால் விமான நிலையங்களில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று கொச்சி வந்த விமானத்தில் போதை பொருள் கடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் படி பயணிகள் அனைவரையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் இருவரையும் சோதனை செய்தனர். ஆனால் எந்த பொருட்களும் சிக்கவில்லை.

கூடுதல் பரிசோதனைக்காக இருவரையும் ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றுக்குள் ஏராளமான கேப்சூல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 20 வயிற்றுக்குள் 80-க்கும் மேற்பட்ட போதை பொருள் கேப்சூல்கள் இருந்தது. இருவரையும் போலீசார் அங்கமாலியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அந்த கேப்சூல்களை வெளியே எடுக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட தம்பதியின் பெயர் விபரங்கள் வெளியாகவில்லை. இவர்கள் திருவனந்தபுரத்திற்கு போதை பொருட்களை கடத்தி செல்ல திட்டமிட்டுள்ளனர். யாருக்காக அவற்றை கடத்தி சென்றார்கள் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.