
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம், ஹீம்பூர் தீபா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடி கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் நடந்தது. அதாவது அந்த கோயிலுக்குள் 12 அடி நீளமுடைய மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று நுழைந்தது. அந்தப் பாம்பை காணும் தருணம் கோயிலில் இருந்த பக்தர்களை பெரும் பீதிக்குள்ளாக்கியது. பின்னர் இந்த தகவல் கிராமமுழுவதும் பரவி, ஏராளமான மக்கள் கோயிலுக்கு வெளியே கூடினர்.
கோயிலுக்குள் சுமார் ஒன்றரை மணி நேரம் அந்த மலைப்பாம்பு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில நேரங்களில் சுவர்களில் ஏறியதும், தரையில் ஊர்ந்து சென்றதுமாக அதன் அசைவுகளை மக்கள் பீதி கலந்த ஆச்சரியத்துடன் பார்த்தனர். பலர் அதை தங்கள் மொபைல் கேமராவில் பதிவு செய்தனர். அந்த வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன. பாம்பைப் பார்த்ததும் பக்தர்கள் வெளியே ஓடி வந்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், கிராமவாசிகள் வனத்துறைக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, வனத்துறையினர் தங்கள் குழுவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து முழு எச்சரிக்கையுடன் மீட்பு பணியில் இறங்கினர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு, மலைப்பாம்பை சிறப்பு கருவிகளைப் பயன்படுத்தி பாதுகாப்பாக பிடித்தனர். அதன் பிறகு, பாம்பு காட்டுப் பகுதியில் விடப்பட்டது. இது தொடர்பாக பிராந்திய வன அலுவலர் மகேஷ் கௌதம் தெரிவித்ததாவது, “மலைப்பாம்பு எதுவும் காயமடையவில்லை. இது மனித வாழ்விடத்திற்கு ஆபத்தாக மாறாமல் சிறப்பாக கையாண்டோம்,” என்றார். மேலும் பாம்பை பாதுகாப்பாக காட்டில் விடப்பட்ட பிறகு, கிராம மக்கள் நிம்மதியாக வீட்டிற்குத் திரும்பினர்.
#बिजनौर
-12 फीट लंबा अजगर मंदिर में घुसा, मंदिर में अजगर देख श्रद्धालुओं में हड़कंप
-जंगल से निकलकर मंदिर पहुंचा विशाल अजगर, वन विभाग ने मशक्कत के बाद अजगर को पकड़ा
-थाना हिमपुरदीपा के माड़ी गांव के शिव मंदिर का मामला#BIJNOR pic.twitter.com/r9lDw6ZnPb— Rohit Kumar (@RohitKu67423202) July 9, 2025