
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஃபெரோஸ்பூர் சாலையில் நடந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 2 நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து, ஒரு பெண்ணின் சடலத்தை இரட்டைப் பையில் வைத்து சாலையோர தடுப்புச் சுவரில் வீசினர். அருகிலிருந்த உள்ளூர்வாசிகள் அதைப் பார்த்து உடனடியாக இளைஞர்களை பிடித்து கேள்விப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் “அழுகிய மாம்பழங்கள் தான்” என்று பொய் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் சந்தேகம் ஏற்பட்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் வழங்கியதோடு, சம்பவம் முழுவதும் அடங்கிய வீடியோவை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றிய தகவலை உறுதிப்படுத்திய காவல் அதிகாரிகள், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த இரட்டைப் பையைத் திறந்து பார்வையிட்டபோது, ஒரு பெண்ணின் சடலம் அதில் இருப்பது உறுதியானது. சடலத்தின் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. காவல்துறையினர் உடலை கைப்பற்றி, அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சடலத்துடன் தொடர்புடையவர்கள் யார், கொலையின் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பதை உறுதிப்படுத்த, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் எடுத்து வைத்த வீடியோவிலும், குற்றவாளிகள் ஒரு நீல நிற மோட்டார் சைக்கிளில் வந்திருப்பது தெளிவாகக் காணப்படுகின்றது. அவர்களில் ஒருவரும் பாதுகாப்பு காப்பாளர் சீருடை அணிந்திருந்ததாகவும், மற்றொருவர் வாகனத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிளை விட்டு தப்பிய குற்றவாளிகள் தற்போது தலைமறை வாகி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், போலீசார் வாகன எண் தகடுகள் மூலம் அவர்களை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர். மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, சம்பவத்தை தடுக்க முயன்றதாலும், அதிகாரிகளுக்கு உடனடி தகவல் வழங்கியதாலும், இந்த கொடூரம் விரைவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
सड़ा आम है… बोलकर सड़क पर फेंका लड़की की लाश, लुधियाना में चौंकाने वाला मामला pic.twitter.com/9J8UWgvoJo
— RAJIEV (राजीव) (@mishrarajiv08) July 9, 2025