டெல்லியில் இன்று காலை 9:04 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டும் மக்கள் அதிர்ச்சியில் வீட்டை விட்டு அவசரமாக வெளியேறினார்.

இந்த நிலநடுக்கம் அரியானாவின் குவாரா பகுதியில் மையம் கொண்டிருந்ததாகவும் பூமியின் மேற்பரப்பிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.