
மதுரை-தூத்துக்குடி 4 வழிச்சாலையில் அருப்புக்கோட்டை அருகே கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்து. அதற்கு எதிரே வேன் ஒன்று வந்து கொண்டு இருந்தது. இந்நிலையில் இந்த 2 வாகனங்களும் வேகமாக சென்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு வாகனங்களின் ஓட்டுனர்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.
இதில் 2 வாகனங்களும் நொறுங்கி சேதமானது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பொக்லைன் மூலம் சேதமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்தினர். இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.