
இந்தியாவுக்கு ஆஸ்கர் பெருமை தேடிய இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணியின் தந்தையுமான, கவிஞரும், பாடலாசிரியருமான சிவ சக்தி தத்தா (வயது 92), வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.
தெலுங்கு திரையுலகில் கவித்துவமான பாடல்களை உருவாக்கிய இவர், பாகுபலி, RRR போன்ற பல வெற்றி படங்களுக்கான பாடல்களை எழுதி புகழ் பெற்றவர். இசையில் தனித்துவம் கொண்ட இவரது மகனான கீரவாணி, ‘RRR’ படத்தில் ‘Naatu Naatu’ பாடலுக்காக ஆஸ்கர் விருது பெற்றதில் பெரும் பெருமை சேர்த்தார்.
சிவசக்தி தத்தாவின் மறைவுக்கு திரைத்துறையின் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிரஞ்சீவி, இயக்குநர் ராஜமௌலி, நடிகர் நாகார்ஜுனா உள்ளிட்ட பிரபலங்கள் சமூக வலைதளங்களிலும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் சிறந்த பங்களிப்பை செய்த இவர், எழுத்தின் நயத்துடன் இசையின் பேரழகையும் இணைத்தவர் என்பதில் சந்தேகமில்லை. அவரது மறைவு திரையுலகுக்கு பேரிழப்பாகும் என திரைத்துறை தெரிவித்துள்ளனர்.