கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஒரு 26 வயது இளம் பெண் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தைகள் இல்லை. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதால் தன்னுடைய தாயார் வீட்டில் சென்று தங்கினார்.
அப்போது உறவினர்கள் சபைக்கு கூட்டி சென்றால் உடல் நலம் சரியாகும் எனக் கூறியதால் பெற்றோர் அந்த இளம் பெண்ணை மேக்காமண்டபம் பாண்டிவிளை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த சபையின் போதகராக ரெஜிமோன் (43) என்பவர் இருந்தார். இவர் அந்த பெண்ணின் பெற்றோரிடம் நோய் குணமாக தனியாக ஜெபம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை நம்பி இளம் பெண்ணை அவரிடம் தனியாக விட்டுவிட்டு பெற்றோர் வெளியே காத்திருந்த நிலையில் மத போதகர் ஜெபம் செய்வதை மறந்து விட்டு அந்த பெண்ணின் அழகில் மயங்கி விட்டார். பின்னர் அந்த பெண்ணை கட்டிப்பிடித்து பலாத்காரம் செய்ய அவர் முயற்சி செய்த நிலையில் அவரிடம் இருந்து தப்பித்து வெளியே வந்த பெண் தன் பெற்றோரிடம் நடந்ததை கூறி கதறி அழுதார்.
இதைத்தொடர்ந்து பெற்றோர் போலீசில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து மதபோதகரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
