இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது அந்த வீடியோவில் சிவப்பு நிற ஜீப்பின் உள்ளே இருவர் அமர்ந்திருந்து தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோன்று ஜிப்பின் வெளியே முன்பக்கத்தில் ஒருவர் அமர்ந்திருந்து தன்னுடைய கேமராவில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு சிங்கம் ஒன்று வருகிறது.

 

அங்கு வந்து சிங்கம் ஜிப்பின் மேலே அமர்ந்திருந்த நபரை நோக்கி பார்க்கிறது. ஆனால் இதனை அந்த நபர் கண்டுக்கவில்லை. இதையடுத்து அவர் தனது பையில் எதையோ தேடிய போது அருகில் இருந்த சிங்கத்தை பார்க்கிறார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர் உறைந்து நிற்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.