
பீகார் மாநிலத்தின் தர்பங்கா மாவட்டம் தர்திஹ் தொகுதியில் அமைந்துள்ள ககோதா கிராமத்தில் முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற தாஜியா ஊர்வலத்தின் போது ஏற்பட்ட மின்சார விபத்து பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஊர்வலத்தில் பங்கேற்றிருந்தவர்கள் 11,000 வோல்ட் உயரழுத்த மின்கம்பியை தொட்டு விபத்துக்குள்ளாகினர். இதில் ஒருவர் உயிரிழந்தார் என்றும், 50க்கும் மேற்பட்டோர் தீக்காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
बिहार के दरभंगा जिले में मुहर्रम के जुलूस के दौरान बड़ा हादसा हो गया. जिले के तारडीह प्रखंड स्थित ककोढा गांव में मुहर्रम के जुलूस के दौरान एक बड़ा हादसा हो गया. जुलूस के दौरान ले जाया जा रहा झंडा अचानक ऊपर से गुजर रहे 11 हजार वोल्ट के बिजली के तार के संपर्क में आ गया, जिससे करंट… pic.twitter.com/MfMFXT0Yj5
— AajTak (@aajtak) July 6, 2025
விபத்து நிகழ்ந்ததையடுத்து அந்த பகுதியில் ஒருவித குழப்பமும் பதற்றமும் ஏற்பட்டது. மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தாஜியா ஊர்வலத்துக்காக ஒன்று கூடியிருந்தபோது, உயர் அழுத்த மின்கம்பி அருகே இருந்த நிலையில், மின் துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தாஜியா தேர் மின்கம்பியைத் தொட்டதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் பயங்கர வெடிப்பு மற்றும் தீ சம்பவம் ஏற்பட்டது. பலர் அந்த இடத்தில் வீழ்ந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பின்னால் மின்சாரத் துறையின் அலட்சியமே காரணம் என மக்கள் கடுமையாக குற்றம் சாட்டினர். ஒவ்வொரு ஆண்டும் முஹர்ரம், தாஜியா போன்ற பண்டிகை நிகழ்வுகள் நடைபெறும் போது பாதுகாப்புக்காக மின்சாரம் துண்டிக்கப்படும் நடைமுறை உள்ளதாகவும், ஆனால் இந்த ஆண்டு அந்த நடவடிக்கை தவற விடப்பட்டது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
அதிகாரப்பூர்வ தகவலின்படி, தற்போது ஒருவர் உயிரிழந்த நிலையில், 12 பேர் தீவிர தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து வருவதாகவும், மீதமுள்ள பாதிப்புகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.