கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பில் படிக்கும் 10 வயதுடைய சிறுமி, பள்ளி முடிந்த பிறகு வீடு திரும்பியபோது சோகமாக இருந்துள்ளார். மறுநாள் பள்ளிக்கு செல்ல மறுத்த அந்த சிறுமி, தாயாரிடம் நடந்ததைக் கூறிய போது, பள்ளி தலைமை ஆசிரியர் சாரதி, தன்னை தனியாக அழைத்துச் சென்று சில்மிஷம் செய்ததாகவும், தன்னை மூக்கில் தாக்கியதில் ரத்தம் வந்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியின் வாக்குமூலம் மற்றும் பெற்றோரின் புகாரின்பேரில், தலைமையாசிரியர் சாரதியால் சிறுமி கிள்ளப்பட்டு சில்மிஷத்திற்கு ஆளானது உறுதியாகியது.

இந்த தகவலின் அடிப்படையில், போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமையாசிரியரை கைது செய்தனர்.  இந்த சம்பவம், பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.