
உத்திரபிரதேசம் மாநிலத்தில் கோவில் தொடர்பான வழக்கு ஒன்று இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ் மற்றும் கே.வினோத் ஆகியோர் வாதாடினர். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜாரான வழக்கறிஞர் எனது கட்சிக்காரர் எனது சொல்லை கேட்பதில்லை. நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மூலம் சரி செய்யப்படுகிறார்கள் என நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இது மிகவும் அவமதிப்பானது. ஏதாவது நேர்மையின்மை நடப்பதை கண்டறிந்தால் வழக்குகளில் இருந்து நாங்கள் விளக்குகிறோம். எங்கள் நீதிபதிகளில் கடவுளை காண்கிறோம் என்று தெரிவித்தார். உடனே இதற்கு பதில் அளித்த நீதிபதி எங்களில் கடவுளை பார்க்காதீர்கள். தயவு செய்து நீதியில் கடவுளை பாருங்கள் என்று குறிப்பிட்டார். மேலும் பெஞ்ச் வழக்கறிஞரை வழக்கிலிருந்து விடுவித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.