திருச்சி மாவட்டத்தில் RTOவாக பணியாற்றி வந்தவர் சுப்பிரமணி (40). இவருக்கு பிரமிளா என்ற மனைவி இருந்துள்ளார். இவரும் ஆண்டாள்புரம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை நாமக்கல் மாவட்டம் அருகே உள்ள வகுரம் பட்டி பகுதியில் தம்பதியினர் இருவரும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தம்பதியினர் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அந்த விசாரணையில் முதற்கட்டமாக, மகளின் காதல் திருமணத்தால்  குடும்பத்திற்குள் ஏற்பட்ட பிரச்சனையில் இருவரும் விபரீத முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அரசுப் பணியில் உள்ள தம்பதியினர் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.