
பாமக கட்சியில் சமீப காலமாக அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்து வருகிறது. ராமதாஸ் தான் உயிரோடு இருக்கும் வரை நான் தான் கட்சியின் தலைவராக இருப்பேன் என்றும் அன்புமணி செயல்தலைவர் என்றும் அறிவித்துள்ளார். ஆனால் அன்புமணி நான்தான் கட்சியின் தலைவர் என்றும் தனக்கே கட்சியில் முழு அதிகாரம் இருக்கிறது என்றும் கூறுகிறார். அதுமட்டுமின்றி புதிய உறுப்பினர்களுக்கு பதவி கொடுப்பது கட்சியிலிருந்து நீக்குவது என ராமதாஸ் ஒருபுறம் செய்ய அன்புமணி மற்றொருபுறம் சமீபத்தில் எம்எல்ஏ அருள் உள்ளிட்டோரை கட்சியிலிருந்து நீக்கினார்.
இதனால் பாமக தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் கௌரவ தலைவர் ஜிகே மணி இருவரும் விரைவில் ஒன்று சேர வேண்டும் எனவும் அப்போது தான் பாமகவால் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று வேதனையோடு கூறி வருகிறார். இந்நிலையில் பாமக கட்சியின் தலைவர் ராமதாஸ் புதிய நிர்வாக குழுவை உருவாக்கி 21 உறுப்பினர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டார். இந்த புதிய நிர்வாகக் குழுவில் எம்எல்ஏ அருள், ஜிகே மணி உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ள நிலையில் அன்புமணியின் பெயர் இடம் பெறவில்லை.
இதன் காரணமாக நிர்வாகக் குழு பொறுப்பில் இருந்த அன்புமணியை ராமதாஸ் கட்சியிலிருந்து நீக்கியதாக தகவல் வெளிவந்தது. ஆனால் இதனை ராமதாஸ் தரப்பு மருத்துவ நிலையில் செயல் தலைவராக இருக்கும் அன்புமணி தொடர்ந்து நிர்வாக குழுவில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பாமக நிர்வாக குழுவில் தன்னுடைய பெயரையும் உள்ளடக்கி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அதில் அன்புமணியின் பெயர் இல்லாததால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக செய்தி பரவிய நிலையில் தற்போது அதனை ராமதாஸ் தரப்பு மறுத்துள்ளது.