பீகார் மாநிலத்தின் எம்.ஜே.கே கல்லூரியில் உள்ள ஒரு கை பம்ப் தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இக்கல்லூரியில், பழுதடைந்த கைப்பம்பை புதிய கைப்பிடி பதிக்காமல், அதற்குப் பதிலாக மரக்கட்டையைச் செயற்கையாக இணைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த தனித்துவமான யுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Aditya Tiwari (@adityatiwari313)

இந்த வீடியோவை adityatiwari313 என்ற இன்ஸ்டாகிராம் பயனர் வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது, “இது எம்.ஜே.கே கல்லூரியின் கோஹினூர் வைரம் போல கட்டப்பட்ட அதிசய கை பம்ப்” எனச் சொல்கிறார். பாதிக்கப்பட்ட கைப்பிடிக்கு பதிலாக, மரத்துண்டு கட்டப்பட்டுள்ளதை காணலாம். இந்த வீடியோ தற்போது 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. பலரும் வேடிக்கையான கருத்துகளையும், சிலர் துயரமுட்டும் பதில்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

ஒரு பயனர், “வறுமை கூட வெட்கப்பட வேண்டிய அளவுக்கு வறுமை” என எழுதியுள்ளார். மற்றொருவர், “இதை உருவாக்கியவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்” என நகைச்சுவையுடன் பதிவு செய்துள்ளார். சமூக ஊடகங்களில் ஏராளமான வீடியோக்கள் வைரலாகும் நிலையில், இவ்வாறு ஒரே மரத்துண்டு மூலம் செயல் படும் கை பம்ப் நெட்டிசன்களுக்கு புதிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.