விழுப்புரம் மாவட்டம் வி.கொத்தமங்கலம் கிராமத்தில் ராமச்சந்திரன் (37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஆயுதப்படையில் காவல்துறையினராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பெனித்தா (33). இவர்கள் இருவருக்கும் 3 குழந்தைகள் இருக்கிறார்கள். பெனித்தா கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருவதால் ராமச்சந்திரன் தனது குடும்பத்துடன் கிருஷ்ணாபுரத்திலேயே தங்கி வந்துள்ளார்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் கடந்த ஒரு மாதமாக விடுப்பில் இருந்த நிலையில் இன்று பணிக்கு செல்ல வேண்டும் என்று இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து நேற்றிரவு வீட்டிலிருந்த ராமச்சந்திரன் தனது மனைவியிடம் சகோதரி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின் இன்று அதிகாலை அவரது சகோதரி வீட்டிற்கு அருகே உள்ள இடத்தில் முருங்கை மரத்தில் அவர் பிணமாக தூக்கில் தொங்கியதை கண்டதும்  அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விருந்து வந்த காவல் துறையினர் ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ராமச்சந்திரனின் மனைவி தனது கணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமச்சந்திரனின் உயிரிழப்பு கொலையா?தற்கொலையா? என்று விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.