
தமிழ் சினிமாவில் நடிகர் ஸ்ரீ ராம் “கற்றது தமிழ்” என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். அதன் பின் “பசங்க” படத்தில் நடித்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். பசங்க படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. தற்போது சில படங்களில் நடித்து வரும் இவர் ஒரு பயோடெக் ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அவரது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் ஸ்ரீ ராம் வெகு நாட்களாக காதலித்து வந்த நிகில் பிரியா என்ற பெண்ணை தற்போது திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாக வருகிறது. அதற்கு நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.