
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
My limit has been reached 🚨
‘Over Dimension Over Loading’ 🚛🚚 pic.twitter.com/O6rz39bqEK— AlhayzaX☠️ (@AlhayzaX) June 20, 2025
அதாவது அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு தனது பின்புறத்தில் ஒரு பெரிய அளவிலான கண்டைனரை மாட்டிக் கொண்டு இழுத்துச் செல்கின்றார். இந்த கண்டெய்னரின் பின்புறத்தில் இரு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் அந்த இருசக்கர வாகனத்தை இயக்கும் போது கண்டெய்னரும் அவரது பின்னே செல்கிறது. இதனால் எந்த விபத்தும் ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.