அரசு பேருந்தும் வருவாய் கோட்டாட்சியரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி அதிகாரி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஜீயபுரம் அருகே அரசு பேருந்தும் வருவாய் கோட்டாட்சியரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வருவாய் கோட்டாட்சியரின் வாகனம் சுக்குநூறாக நொறுங்கி ஆர்டிஓ ஆரமுது தேவசேனா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த ஓட்டுநரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் உயிரிழந்த அதிகாரியின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது