சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று விலை அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 74,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 10,091 ரூபாய்க்கும், ஒரு சவரன் 80720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 122 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 122000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.