சென்னையில் கடந்த நான்கு நாட்களாக தங்கத்தின் விலை சலானுக்கு 3000 ரூபாய் வரை உயர்ந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தங்கம் நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நீடித்தது. இன்று தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது.

அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 74,440 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9305 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் 10,150 ரூபாய்க்கும் ஒரு சவரன் 81, 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையிலும் ஒரு கிராம் 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 120000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.