18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 3ஆம் தேதி அன்று நிறைவு பெற்றது. இதன் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர் சி பி வெற்றி பெற்றது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு பல முன்னாள் வீரர்கள் சிறந்த பிளேயிங் லெவனை  தேர்வு செய்து வருகின்றனர்.

அதன்படி இந்திய முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தான் தேர்வு செய்த பிளேயிங் லெவன் பட்டியலை வெளியிட்டுள்ளார். அந்த அணியில் பிரெவிஸ் மற்றும் நூர் அகமது ஆகிய 2 சிஎஸ்கே வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் சப்மன் கில், பில் சால்ட் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை. அத்துடன் மிட்செல் மார்ஷ், ஹர்திக் பாண்ட்யா, நமன் திர் மற்றும் ஹர்ப்ரீத் பிரார் ஆகியோரை இம்பேக்ட் வீரராக தேர்வு செய்துள்ளார்.

முழு பட்டியல் இதோ…

சாய் சுதர்சன், விராட் கோலி, ஜோஸ் பட்லர், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், பிரெவிஸ், குருனால் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா, நூர் அகமது, ஜோஷ் ஹேசில்வுட், பிரசித் கிருஷ்ணா.

இம்பேக்ட் வீரர்கள்: மிட்செல் மார்ஷ், ஹர்திக் பாண்ட்யா, நமன் திர் மற்றும் ஹர்ப்ரீத் பிரார்.