இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18 வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. பெங்களூர் அணி இறுதி போட்டிக்கு முன்னேறிய நிலையில் வெளியேறுதல் சுற்றில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதிய நிலையில் மும்பை வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளிடையே போட்டி நடைபெறும் நிலையில் இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தற்போது போட்டி தொடங்கிவிட்ட நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. போட்டி தொடங்கியுள்ள நிலையில் தற்போது அகமதாபாத் மைதானத்தில் லேசாக தூறல் மழை பொழிகிறது.
மேலும் ஒரு வேளை மழை பெரிதாக வந்தால் பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருப்பதால் போட்டி ரத்தாகும் பட்சத்தில் நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
