18 ஆவது ஐபிஎல் போட்டி இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வெளியேறுதல் சுற்றில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதியது. இந்த போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி மும்பை வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக பஞ்சாப்புடன் மோத இருக்கிறது. பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டியில் வெற்றி பெரும் அணி இறுதி போட்டியில் பெங்களூருவை எதிர்கொள்ளும்.

இந்நிலையில் குஜராத் மற்றும் மும்பை அணியின் போட்டியின் போது டாஸ் போடப்பட்டது. இந்த டாசில் மும்பை அணி வென்ற நிலையில் ஹர்திக் பாண்டியா கை கொடுக்க வந்தார். ஆனால் கில் அவரை கண்டுகொள்ளாமல் சென்று விட்டார். இதனால் இருவருக்குள்ளும் ஈகோ பிரச்சனை இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவிய நிலையில் தற்போது இதற்கு கில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதாவது ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் ஹர்திக் பாண்டியா உடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த  கில் அன்பைத் தவிர வேறு எதுவும் இல்லை என கூறியுள்ளார். மேலும் இதே போன்று ஹர்த்திக் பாண்டியாவும் சுப்மன் கில்லுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.