தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் இருந்து திருச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை பண்ணபுரத்தைச் சேர்ந்த டிரைவர் விஜயன் என்பவர் ஓட்டினார். ராஜேஷ் கண்டக்டர் ஆக இருந்தார். அந்த பேருந்தில் சுமார் 40 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் வேடசந்தூர் அருகே உள்ள பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது டிரைவர் விஜயனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இருப்பினும் அவர் பேருந்தை இயக்கி சாலை ஓரத்தில் நிறுத்தினார். அதன் பின் அவர் நெஞ்சை பிடித்துக் கொண்டு சீட்டில் சரிந்தார். இதை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். அப்போது அந்த வழியாக வாக்கிங் சென்ற ஷேக் செந்தில் என்பவர் சம்பவத்தை கேட்டு டிரைவர் விஜயனை வேறொரு சீட்டில் படுக்க வைத்தார்.

அதன் பின்னர் பேருந்தை இயக்கி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்க அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. டிரைவர் விஜயன் உயிரை காப்பாற்றிய செந்திலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.