குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் சகாதேவ் சிங் கோலி என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவ ஊழியராக குஜராத்தில் அமைந்துள்ள எல்லை பாதுகாப்பு படைத்தளம் மற்றும் விமானப்படைத்தளத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு இந்தியா தொடர்பான தகவல்களை பகிர்ந்ததாக காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.

அதன்பின் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சகாதேவ் சிங் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தானை சேர்ந்த அதிதி  என்ற பெண்ணுடன் வாட்சப் மூலம் தொடர்பு ஏற்பட்டது தெரியவந்தது. அந்தப் பெண் பாகிஸ்தான் உளவு அமைப்பின் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். அவர் குஜராத்தில் உள்ள விமானப்படை தளத்தின் புகைப்படங்களை அவரிடம் கேட்ட நிலையில் அதனை வாட்ஸ்அப் வழியாக சகாதேவ் அந்த பெண்ணிற்கு அனுப்பியுள்ளார்.

இதைத்தொடர்ந்து யார் என்று தெரியாத நபருக்கு 40 ஆயிரம் பணமும் அனுப்பியிருக்கிறார் என்றும்  கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடந்துவரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.