
கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டிமாங்கோடு பகுதியில் கிறிஸ்டோபர் (48) என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் தனது காரில் நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் சாலையில் சென்று சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையோரத்தில் இருந்த கால்வாயில் கவிழ்ந்து விழுந்தது.
அந்த கால்வாயில் அதிகப்படியான சகதி இருந்ததால் கார் சிக்கிக் கொண்ட நிலையில் கிறிஸ்டோபரால் காரில் இருந்து வெளியே வர முடியவில்லை. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் கால்வாயில் சிக்கிய காரை அப்பகுதி இளைஞர்களுடன் சேர்ந்து வெளியே எடுத்தனர்.
அதன் பின் கிறிஸ்டோபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.