டாஸ்மாக் அமலாக்கத்துறை சோதனை விவகாரம் குறித்து தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பி .ஆர் கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத் துறையினர் மேற்கொண்ட விசாரணை நடத்த தடைவிதித்தும், தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுக்கு பதில் அளிக்க அமலாக்குத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

இந்நிலையில் இருகுறித்து சென்னையில் செய்தியாளர்களை மத்திய இணையும் மந்திரி எல் முருகன் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அமலாக்கத் துறையின் சோதனைக்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்கு தவறு நடந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு அமலாக்கத்துறை விசாரிக்கிறது. ஊழல் செய்தவர்கள் கண்டிப்பாக தண்டனை அனுபவிப்பார்கள் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். அமலாக்கத்துறை என்பது ஒரு சட்டப்படியான அமைப்பு, அமலாக்கத்துறை சட்டத்துக்கு உட்பட்டு வழக்கை எதிர்கொள்ளும் என்று தெரிவித்தார்.