
மத்திய பிரதேசம் சட்டினா மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடையில் ஏழு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தவருக்கு இப்போது வரை மாதம் மாதம் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அதே சமயம் உயிரோடு இருக்கும் நபர் இறந்து விட்டதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டதால் அவருக்கு ரேஷன் பொருட்கள் செல்வதில்லை.
62 வயதாகும் ஷங்கர் என்பவர் 2017-ஆம் ஆண்டு இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய ஆறு மாதங்களாக சங்கர் போராடி வருகிறார். இருப்பினும் குழப்பம் தீரவில்லை. விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.